தினமலர் முதல் பக்கம்

Standard Classifieds – Real Estate

  • Listed: May 3, 2016 6:40 pm
Standard Classifieds – Real Estate

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்துக்கும் இரண்டு தேடல்களே பிரதானம் – முதலாவது உணவு, அடுத்து வசிப்பதற்கு ஏற்ற இடம். தன் மனைவி, குழந்தைகள் இன்புற்றிருக்க ஏற்ற வீட்டினைக் கட்டிக் கொள்ள ஆசைப்படாத மனிதன் இருக்க முடியாது. ஆனால், அத்தனை பேருக்கும் அது சாத்தியப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
‘மண்ணுலயும் பொன்னுலயும் போடற காசு எப்பவுமே வீணாகாது‘ங்கறது பொதுவான கருத்து. ஆனால், அதுவே அலைந்து, திரிந்து வீடு, நிலம் வாங்குவது என்பது எல்லோருக்கும் ஆகக் கூடிய காரியமுமில்லை. வீடு, அலுவலகம்னு ஓடிக் கொண்டே இருப்பவர்கள் நாலு இடம் தேடிப்போய் பார்த்து வாங்குவது என்பது முடியாத விஷயம்.
ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தெருவுக்கு தெரு புரோக்கர்கள், ஆலோசகர்கள் இருந்தும், அவர்களும் தங்களை வளர்த்துக் கொள்ள ஏற்ற வழியில்லாமல் அவதிப்படுவதுண்டு. இந்த விஷயத்தையெல்லாம் கருத்தில் கொண்டு தினமலர் தனது வாசகர்களுக்காக உருவாக்கியதுதான் இந்த இணையம். இதில், நீங்கள் இருந்த இடத்துல இருந்தபடியே வீடு, நிலம் வாங்குவது, விற்பதுன்னு என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வீடு, நிலம் விற்க, வாங்க நினைப்பவர்கள் தேவைப்படும் விவரங்களை நேரடியாக இந்த இணையத்தில் ‘ரியல் எஸ்டேட்‘ பதியலாம், பலனடையலாம்… அதுவும், இலவசமாகவே!

No Tags

  

Leave a Reply

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Categories